TD வங்கியைப் பற்றி

200-க்கும் அதிக மொழிகள் பேசுகிறோம்

200-க்கும் அதிக மொழிகள் பேசுகிறோம்

1,150-க்கும் அதிகமான கிளைகள்

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட நீண்ட நேரம் திறந்திருக்கும்1, அவற்றில் 400 கிளைகள் ஞாயிறும் திறந்திருக்கும்

பலமொழி வசதியுடன் கூடிய 2,800-க்கும் அதிகமான ATM மையங்கள்

பலமொழி வசதியுடன் கூடிய 2,800-க்கும் அதிகமான ATM மையங்கள்

100 ஆண்டுகளுக்கும் மேலாக, கனடாவிற்குப் புதிதாக வருபவர்களுக்குச் சேவை புரிந்து, நம்பகமான வங்கி என்ற மரியாதையைப் பெற்றுள்ளதைக் கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம்.

நாங்கள் பல்வேறு சமூகங்களை எப்படி ஆதரிக்கிறோம் என அறிந்துகொள்ளுங்கள்.

பாதுகாப்பான மற்றும் பத்திரமான வங்கிச் சேவை

பாதுகாப்பான மற்றும் பத்திரமான வங்கிச் சேவை

  • Global Finance, தனது 2013 தரமதிப்பீட்டில் உலகின் மிகப் பாதுகாப்பான 50 வங்கிகள் பட்டியலில் TD வங்கியைச் சேர்த்திருக்கிறது.
  • நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.
  • எங்கள் ஆன்லைன் பாதுகாப்பு உத்தரவாதமானது, திருட்டு அல்லது அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் வங்கிச் செயல்பாட்டினால் ஏற்படக்கூடிய இழப்புகள் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
  • நீங்கள் உங்கள் TD கடன் அட்டையைப் பயன்படுத்தும்போது, அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளிலிருந்து, உங்களுக்கு எவ்விதக் கடப்பாடும் இல்லாத வகையில் விசா அல்லது மாஸ்டர்கார்டு (இரண்டில் பொருந்துகின்ற ஒரு) நெறிமுறையினால் பாதுகாக்கப்படுகிறீர்கள்.3
24/7 சேவை

24/7 சேவை

வங்கிச் சேவையை ஆன்லைனில் அணுகலாம், ஃபோனில் அணுகலாம் அல்லது எங்கள் 2,800 ATM மையங்களில் (தானியங்கி வங்கி எந்திரம்) ஒன்றில் அணுகலாம். நீங்கள் பயணத்திலிருந்தாலும் TD மொபைல் பயன்பாட்டின் மூலம் வங்கிச் சேவைகளை அணுகலாம்.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான எங்கள் வங்கிச் சேவைத் தொகுப்பு

கனடாவிற்குப் புதியவர்களுக்கான எங்கள்
வங்கிச் சேவைத் தொகுப்பு

தொடக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.

  • மாதக் கட்டணமற்ற கணக்கைப் பெறலாம்
  • உங்கள் சேமிப்புக் கணக்கில் போனஸ் விகிதம்
  • கடன் அட்டை பெறலாம்
  • கட்டணமற்ற பண இடமாற்றம்
  • இன்னும் பல!

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்கள்" தொகுப்பைப் பற்றி அறிக

பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளையும் காண்க

வங்கிக் கிளை அல்லது ATM மையத்தில் உங்கள் பணத்தை அணுகலாம், பில்களுக்கு பணம் செலுத்தலாம், காசோலைகள் எழுதலாம் இன்னும் பலவற்றைச் செய்யலாம்.

சிறந்த கனடிய நாணயநிலை வரலாற்றை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது, அத்துடன் ஆன்லைன் ஷாப்பிங், கார் வாடகை, பயணத்திற்குப் பதிவு செய்தல் போன்றவற்றுக்கும் கடன் அட்டையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் பணத்திற்கு வட்டி பெறுங்கள், உங்கள் சேமிப்பு பெருகுவதைப் பாருங்கள்.

உலகின் எப்பகுதியிலும் இருக்கும் உங்கள் குடும்பத்திற்கோ, நண்பர்களுக்கோ பாதுகாப்பாக பணம் அனுப்பலாம்.4

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் உதவுகிறோம்

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் உதவுகிறோம்

  • கார் வாங்க கடனுதவி
  • வீடு வாங்க கடனுதவி
  • உங்கள் குழந்தைகளின் கல்விக்காகத் திட்டமிடுதல்
  • உங்கள் சேமிப்புகளை முதலீடு செய்தல்
  • வணிகம் தொடங்குதல்

எப்படிக் கடன் பெறுவது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது என அறிக


கனடாவில் வங்கிச் சேவை பெறுதல் குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளதா? உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம்

வங்கிச் சேவை அல்லது நிதி தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அவற்றுக்கு பதிலளிக்கக் காத்திருக்கிறோம், அத்துடன் உங்களுக்கு தனிப்பட்ட நிதி மதிப்பீட்டையும் வழங்குகிறோம். சந்திப்பு அனுமதி பெற அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்லவும்.

ஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக

சந்திப்பு அனுமதி பெறுக