கனடிய வங்கிக் கணக்குகள் பற்றி அறிக

காசோலைக் கணக்கு ஹீரோ பேனர்

TD வங்கியிடம் உங்கள் தினசரி தேவைகளுக்கு ஏற்ற வங்கிக் கணக்கு உள்ளது

நீங்கள் கனடா வந்ததும் உங்கள் பணத்தை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வைக்க உங்களுக்கு ஒரு இடம் தேவை. கனடாவில், பெரும்பாலான மக்கள் "காசோலைக் கணக்கை" தங்கள் தினசரி தேவைகளுக்கான வங்கிக் கணக்காக வைத்துள்ளனர். காசோலைக் கணக்கு என்பது உங்கள் பெரும்பாலான அன்றாட நடவடிக்கைகளுக்குப் பயன்படும் கணக்காகும்.


கேமராவுடன் ஒரு பெண்
 • எந்த ஒரு TD வங்கிக் கிளை அல்லது ATM மையத்திலும் (தானியங்கி வங்கி எந்திரம்) நீங்கள் விரும்பும்போதெல்லாம் பணம் எடுக்கலாம்
 • பாதுகாப்பான தொலைபேசி மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவை
 • பில்களுக்கு பணம் செலுத்த, ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய, அல்லது உலகத்தில் எங்கும் இன்-ஸ்டோர் பர்ச்சேஸ் செய்ய TD அணுகல் அட்டையைப் (வங்கி அட்டை) பயன்படுத்திக் கொள்ளலாம்.
 • மொபைல் வங்கிச் சேவை
 • கணக்கில் பணம் செலுத்தலாம்
 • கட்டணமின்றி ஆன்லைன் அறிக்கைகளைப் பெறலாம்
 • பணத்தை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் அனுப்ப - Visa Direct பண இடமாற்றம்

நாங்கள் உங்கள் மொழியைப் பேசுகிறோம், 1,150-க்கும் அதிகமான கிளைகள் உள்ளன, ஆகவே நீங்கள் ஒரு கிளையை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

உங்கள் தேவைகளை நிறைவேற்றும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் எங்களிடம் உள்ளன.

நிதியுதவி தொடர்பாக உதவி வேண்டும்

எப்போதாவது உங்கள் காசோலைக் கணக்கில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டால், அனுமதிக்கப்பட்ட மிகை எடுப்பு வரம்புக்குள்ளாக, அது தானாக ஈடுகட்டப்படும் என்பதால் மிகை எடுப்புப் பாதுகாப்பு1 வசதி உங்களுக்கு ஒரு மன அமைதி கொடுக்கிறது.

மிகை எடுப்புப் பாதுகாப்பு பற்றி மேலும் அறிக

ஆன்லைன் வங்கிச் சேவை தொடர்பாக உதவி வேண்டும்

EasyWeb இணைய வங்கிச் சேவையின் மூலம் ஆன்லைனில் வங்கிச் சேவைகளை அணுகுவது எளிதானது, பாதுகாப்பானது மற்றும் பத்திரமானது. ஆன்லைன் விளக்கங்கள் மற்றும் செயல்முறை எடுத்துக்காட்டுகளின் மூலம் நீங்கள் ஆன்லைன் வங்கிச் சேவை பற்றி எளிதாக அறிந்துகொள்ளலாம்.

விளக்கத்தைக் காணவும் அல்லது செயல்முறை எடுத்துக்காட்டை முயற்சித்துப் பார்க்கவும்

எனக்கு வங்கி அட்டை வேண்டும்

TD அணுகல் அட்டை சிப் பொருத்தப்பட்ட ஒரு டெபிட் அட்டையாகும். கொள்முதல்களுக்குப் பணம் செலுத்தவும் உங்கள் TD வங்கிக் கணக்குகளை அணுகவும் அதைப் பயன்படுத்தலாம். ஆன்லைனில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்ய அல்லது உலகெங்கும் உள்ள ஸ்டோர்களில் ஷாப்பிங் செய்யவும் அதைப் பயன்படுத்தலாம்.

TD அணுகல் அட்டையினால் கிடைக்கும் அனுகூலங்களைக் காண்க

நான் யுனைடெட் ஸ்டேட்ஸுக்கு அடிக்கடி பயணம் செய்வேன்

சர்வதேச வங்கிச் சேவைகளின் உதவியால் நீங்கள் ஆன்லைனிலோ அல்லது யு.எஸ். வங்கிச் சேவைகளை அணுகுவதற்கு மிகச் சௌகரியமான வங்கிகளான சுமார் 1,300 TD வங்கிகளிலோ உங்கள் அமெரிக்க வங்கிச் சேவைகளை அணுக முடியும்.

TD சர்வதேச வங்கிச் சேவையின் வசதிகள் பற்றி அறிக

முக்கியமான ஆவணங்களையும் நகைகளையும் வைத்திருக்க ஒரு இடம் வேண்டும்

பாதுகாப்பு வைப்புப் பெட்டிகள் என்பவை மதிப்பு மிக்க, முக்கியமான பொருள்களை வைத்திருப்பதற்கான பத்திரமான இடங்களாகும். சில சமயம், நீங்கள் உரிய தகுதி பெற்ற வங்கிக் கணக்கைத் தொடங்கும் போது, உங்கள் வங்கிக் கிளையில் பாதுகாப்பு வைப்புப் பெட்டி வசதி இருக்குமானால், சிறிய பாதுகாப்பு வைப்புப் பெட்டிக்கான ஆண்டுக் கட்டணம் சேர்க்கப்படும்.

பாதுகாப்பு வைப்புப் பெட்டி வசதியைப் பெற அருகிலுள்ள வங்கிக் கிளைக்குச் செல்லவும்

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு
புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.2

200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான பிற சேவைகள்

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்கள்" தொகுப்பு


எங்கள் "கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பில்" உங்களுக்கு ஒரு காசோலைக் கணக்கும் கிடைக்கிறது.


நீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:

(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
 • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (IMM படிவம் 5292)
 • தற்காலிக அனுமதி (IMM படிவம் 1442, 1208, 1102)

(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
 • கனடிய ஓட்டுனர் உரிமம்
 • கனடிய அரசாங்க அடையாள அட்டை
கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:
 • நீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
 • உங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
 • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
 • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!