வாழ்க்கைத் திட்டம்கனடாவிற்குப் புதியவர்கள்தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

தயாரிப்புகள் மற்றும் சேவைகள்

கனடாவிற்குப் புதியவர்களுக்கான எங்கள் வங்கிச் சேவைத் தொகுப்பு

கனடாவிற்குப் புதியவர்களுக்கான வங்கிச் சேவை தொகுப்பு1

கனடாவில் உங்கள் நிதியியல் அடித்தளத்தை அமைத்துக் கொள்ளத் தொடங்குங்கள்.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:

 • நீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
 • உங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்
 • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
 • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்

மாதக் கட்டணமற்ற காசோலைக் கணக்கைப் பெறுக:

போனஸ் விகிதத்துடன் கூடிய சேமிப்புக் கணக்கைப் பெறுக4

கடன் அட்டை பெறலாம்5:

கட்டணமின்றி பணம் அனுப்புதல்

 • Visa Direct பண இடமாற்றச் சேவையைப் பயன்படுத்தி, எந்த நாட்டுக்கும் பணம் அனுப்பலாம். ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு பண இடமாற்றத்திற்கான இடமாற்றக் கட்டணத்தை உங்களுக்குத் திருப்பி வழங்கிவிடுவோம்6
 • 170-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 150 நாணயங்களில் பணம் அனுப்பலாம்7

நீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:

 1. பின்வரும் ஆவணங்களில் ஒன்று:
  • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
  • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (எ.கா., IMM படிவம் 5292)
  • தற்காலிக அனுமதி (எ.கா., IMM படிவம் 1442, 1208, 1102)
  மற்றும்

 2. பின்வரும் ஆவணங்களில் ஒன்று:
  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • கனடிய ஓட்டுனர் உரிமம்
  • கனடிய அரசாங்க அடையாள அட்டை
பிற அடையாள ஆவணங்கள் ஏற்கப்படலாம் அல்லது தேவைப்படலாம். விவரங்களுக்கு ஒரு TD கிளைக்குச் செல்லவும்.

நீங்கள் சர்வதேச மாணவரா?

TD சர்வதேச மாணவர் தொகுப்பை நீங்கள் சௌகரியமாகப் பயன்படுத்தும் வரையில், தினசரி வங்கிச்சேவை முதல் கடன் அட்டைகள், பணப் பரிமாற்றங்கள் வரை பல்வேறு விதமான சேவைகளை வழங்கி உங்களுக்கு எப்படி உதவுகிறோம் என்பதைப் பார்க்கவும்.

கனடாவில் உங்கள் முதல் சொந்த வீட்டை வாங்குங்கள்8

 • கனடாவில் கிரெடிட் இல்லை என்றாலும் TD அடமானக் கடன் பெற நீங்கள் தகுதி பெறலாம்
 • புதிய வீட்டுக்குக் கடன் பெற, ஒரு TD வல்லுநர் உங்களுக்கு வழிகாட்டுவார்
 • உங்கள் இலக்குகளும் நிதிநிலையும் மாறிவரும் சூழலில், TD நெகிழ்தன்மையுள்ள அடமான அம்சங்கள் வழியாக உங்கள் கட்டணங்களை உங்கள் தேவைக்கு ஏற்ப நிர்வகிக்கலாம்

தொடங்கத் தயாரா? அருகிலுள்ள கிளைக்குச் செல்லவும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் உங்கள் சேவையில் - பல மொழிச் சேவை வசதியுடன்

உங்களுக்கு அருகிலுள்ள ஒரு வங்கிக் கிளையைக் கண்டறிக

சந்திப்பு அனுமதி பெறுக

உங்கள் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் உதவுகிறோம்

 • கார் வாங்க கடனுதவி
 • வீடு வாங்க கடனுதவி
 • உங்கள் குழந்தைகளின் கல்விக்காகத் திட்டமிடுதல்
 • உங்கள் சேமிப்புகளை முதலீடு செய்தல்
 • வணிகம் தொடங்குதல்

எப்படிக் கடன் பெறுவது, சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது என அறிக

விரிவாக்கு சட்டம்

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!