உலகின் எப்பகுதிக்கும் பணம் அனுப்பலாம்

பண-இடமாற்றம்-ஹீரோ-பேனர்

ஆன்லைன், வயர் டிரான்ஸ்ஃபர், வரைவோலை (அ) காசோலை மூலம் பண இடமாற்றம்

உங்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினரையும் நண்பர்களையும் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். அதற்காகவே, பணம் அனுப்புவதற்கு பாதுகாப்பான மற்றும் பத்திரமான பல வழிகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.


பெண்ணுடன் ஒரு ஆண்
 • Visa Direct பண இடமாற்றம் - கிட்டத்தட்ட உலகின் எந்தப் பகுதிக்கும் ஆன்லைனில் பணம் அனுப்பும் வசதி1
 • வயர் டிரான்ஸ்ஃபர்கள் - உங்கள் TD வங்கிக் கணக்கிலிருந்து 25 வெளிநாட்டு நாணய மதிப்பில் பணம் அனுப்பலாம்
 • வங்கி வரைவோலைகள்
 • சான்றளிக்கப்பட்ட காசோலைகள்
 • Interac e-Transfer® - கனடாவில் உள்ள நபருக்கு அல்லது வணிகத்திற்கு EasyWeb அல்லது TD பயன்பாட்டின் மூலம் பணம் அனுப்புங்கள்

எங்கள் பண இடமாற்றச் சேவையைப் பயன்படுத்த, நீங்கள் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும்.


கனடாவிற்குப் புதியவரான நீங்கள் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க, அருகிலுள்ள TD வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.

என்னென்ன கொண்டு வர வேண்டும்?

அன்னிய செலாவணி மற்றும் பயணக் காப்பீடு

கண்ணாடி பார்க்கும் தாயுடன் குழந்தை

நீங்கள் விரும்பும் வெளிநாட்டு நாணய மதிப்புக்கு பணத்தை மாற்றம் செய்து கொள்ள உதவுகிறோம். வங்கிக் கிளையில், ஆன்லைனில் அல்லது தொலைபேசி மூலமும் நீங்கள் அன்னிய செலாவணியை ஆர்டர் செய்யலாம், உங்களுக்கு வசதியான வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அன்னிய செலாவணிச் சேவைகள்

நாணயப் பரிமாற்ற கணக்கீட்டுக் கருவி

கடற்கரையில் இரு குழந்தைகளுடன் நடக்கும் பெண்

சொந்த நாட்டுக்கு அல்லது விடுமுறை சுற்றுலா செல்லத் திட்டமிடுகிறீர்களா? பயண மருத்துவக் காப்பீடு வழங்கும் பாதுகாப்பைப் பெறுங்கள்2.

உங்கள் தேவைகளுக்குப் பொருத்தமான பயண மருத்துவக் காப்பீடு

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு
புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.3

200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை.

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்கள்" தொகுப்பு

கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பில் பண இடமாற்றச் சேவையும் உள்ளடங்கும். இதில் 6 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஒரு முறை இலவசமாக Visa Direct பண இடமாற்றம் செய்துகொள்ளலாம்.


நீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:

(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
 • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (IMM படிவம் 5292)
 • தற்காலிக அனுமதி (IMM படிவம் 1442, 1208, 1102)

(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
 • கனடிய ஓட்டுனர் உரிமம்
 • கனடிய அரசாங்க அடையாள அட்டை
கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:
 • நீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
 • உங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
 • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
 • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!