கனடிய சேமிப்புக் கணக்குகள் பற்றி அறிக

இலட்சியங்களுக்காக சேமிக்கும்போது சேமிக்கும் தொகைக்கு வட்டி பெறலாம்

இலட்சியங்களுக்காக சேமிக்கும்போது சேமிக்கும் தொகைக்கு வட்டி பெறலாம்

பணத்தைச் சேமிப்பது என்பது நிதி சம்பந்தமான உங்கள் இலட்சியங்களுக்காக திட்டமிடவும் உங்கள் வாழ்க்கையைக் கட்டமைக்கவும் புத்திசாலித்தனமான வழியாகும். உங்கள் சேமிப்புகளை எளிதாக அணுக முடிந்தால், அவற்றை நீங்கள் அவசரத் தேவைகளுக்கு, பயணங்களுக்கு அல்லது வீடு வாங்க முன்பணம் செலுத்துவதற்கு போன்றவற்றுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சேமிப்புக் கணக்கு என்பது, உங்கள் சேமிப்புகளைப் பெருகச் செய்வதற்கான மிக உகந்த வழிகளில் ஒன்றாகும். அது பல உதவிகரமான நன்மைகளை அளிக்கிறது.


அது உங்கள் பணத்தைப் பத்திரமாக வைப்பதற்கான இடமாகத் திகழ்கிறது
  • அது உங்கள் பணத்தைப் பத்திரமாக வைப்பதற்கான இடமாகத் திகழ்கிறது
  • உங்கள் தேவைகளைப் பொறுத்து நீங்கள் சேமிக்கும் பல்வேறு வழிகளிலிருந்து தேர்வு செய்யலாம்
  • உங்களுக்குத் தேவைப்படும் போது பணத்தை எளிதாக அணுக முடியும்


கனடாவிற்குப் புதியவரான நீங்கள் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க, அருகிலுள்ள TD வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும்.

என்னென்ன கொண்டு வர வேண்டும்?

உங்கள் பணத்தைச் சேமித்தல்

பணத்தைச் சேமிக்கவும் வட்டி பெறவும், பாதுகாப்பான மற்றும் பத்திரமான பல வழிகள் உள்ளன.

எங்கள் சேமிப்புக் கணக்குகள் பற்றி மேலும் அறிய வேண்டுமா?

உங்கள் தேவை எதுவாக இருந்தாலும், அதற்கு எங்களிடம் தீர்வுகள் உள்ளன

நான் கனடாவிற்கு பணம் கொண்டு வருகிறேன், அந்தப் பணத்திற்காக எனக்கு ஒரு வங்கிக் கணக்கு வேண்டும்.

எந்த நேரத்திலும் உங்கள் பணத்தை அணுக முடிய வேண்டுமா? அல்லது பிரீமியம் வட்டி வீதத்தை எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் எதிர்பார்ப்பு எதுவானாலும் அதை நிறைவேற்ற எங்களிடம் கணக்குகள் உள்ளன.

எங்கள் சேமிப்புக் கணக்குகளைக் காண்க

பணத்தைச் சேமிக்க எனக்கு உதவி வேண்டும்

உங்கள் காசோலைக் கணக்கிலிருந்து உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு முன்னங்கீகாரம் பெற்ற பண இடமாற்றச் சேவையை அமைக்க TD வங்கி உதவும். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள், அந்தத் தொகை தானாக இடமாற்றம் செய்யப்படும். இந்த வசதியை அமைக்க கட்டணம் எதுவும் கிடையாது

முன்னங்கீகாரம் பெற்ற பண இடமாற்றங்கள் பற்றி அறிக

நான் என் குழந்தையின் கல்விக்காக சேமிக்கத் தொடங்க வேண்டும்

எதிர்கால கல்வி செலவுகளுக்காக சேமிக்க, பதிவுசெய்யப்பட்ட கல்வி சேமிப்புத் திட்டத்தைத் (RESP) தொடங்குவது சிறப்பான வழியாகும். RESP திட்டத்தில் நீங்கள் சேர்க்கும் பணம் வரிவிதிப்பின்றி அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, உங்கள் சேமிப்பு பெருகுவதற்காக கனடிய அரசாங்கம் மானியங்களையும் வழங்குகிறது.

RESP திட்டங்கள் பற்றி அறிக

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு
புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.2

200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான பிற சேவைகள்

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்கள்" தொகுப்பு


எங்கள் "கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பில்" ஒரு சேமிப்புக் கணக்கும் உள்ளடங்கும்.


நீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:

(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

  • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
  • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (IMM படிவம் 5292)
  • தற்காலிக அனுமதி (IMM படிவம் 1442, 1208, 1102)

(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

  • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
  • கனடிய ஓட்டுனர் உரிமம்
  • கனடிய அரசாங்க அடையாள அட்டை
கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:
  • நீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
  • உங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
  • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
  • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!