வாழ்க்கைத் திட்டம்கனடாவிற்குப் புதியவர்கள்தயாரிப்புகள் மற்றும் சேவைகள்கடன், சேமிப்பு மற்றும் முதலீடு செய்யும் வழிகள்

கடன், சேமிப்பு & முதலீட்டுக்கான வழிகள்

உங்கள் இலட்சியங்களை அடைய உதவும் தயாரிப்புகளும் சேவைகளும் எங்களிடம் உள்ளன

உங்கள் இலட்சியங்களை அடைய
உதவும் தயாரிப்புகள் & சேவைகள்
எங்களிடம் உள்ளன

வீடு அல்லது கார் வாங்குதல், வணிகம் தொடங்குதல் அல்லது உங்கள் பணி ஓய்வுக் காலத்திற்காக சேமித்தல் என உங்கள் அனைத்து இலட்சியங்களையும் அடைய உதவும் தயாரிப்புகளும் சேவைகளும் எங்களிடம் உள்ளன

உங்களது அனைத்து இலட்சியங்களையும் அடைய உதவுகிறது

புதிய அல்லது பயன்படுத்திய வாகனம் வாங்குவதற்கான வசதியான மற்றும் நெகிழ்தன்மை கொண்ட வழி வாகனக் கடன் பெறுதலாகும். உங்கள் பட்ஜெட்டுக்குப் பொருந்துகின்ற கடனுதவி பெற்று உங்களுக்கு ஏற்ற வாகனத்தை வாங்கலாம்.

வாகனக் கடன்கள் பற்றி மேலும் அறிக

கார் வாங்க கடனுதவி

வீடு வாங்குவது என்பது நீங்கள் ஒரே முறை செய்யக்கூடிய மிகப் பெரிய செலவாக இருக்கும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சரியான அடமானக் கடனைத் தேர்ந்தெடுக்க TD அடமானக் கடன் நிபுணர்கள் உதவுவார்கள்.

அடமானக் கடன்கள் பற்றி மேலும் அறிக

வீடு வாங்க கடனுதவி

உங்கள் சிறு வணிக வங்கித் தேவைகள் அனைத்தையும் TD வங்கி பூர்த்தி செய்கிறது. எங்கள் சிறு வணிக ஆலோசகர்கள் உங்கள் வணிகத்திற்கு ஏற்ற வங்கித் திட்டங்களையும் அம்சங்களையும் தேர்ந்தெடுக்க உதவுவார்கள். உங்கள் வணிகத்திற்குத் தேவையான சரியான வங்கித் தீர்வுகளைத் தேர்ந்தெடுக்க எங்கள் சிறு வணிக ஆலோசகர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

சிறு வணிகத்திற்கான
வங்கிச் சேவை பெறும் பல்வேறு வழிகளைக் காண்க

வணிகம் தொடங்குதல்

பணி ஓய்வு சேமிப்புத் திட்டம் (RSP) என்பது கனடிய அரசாங்க ஆதரவுடன் செயல்படும் சேமிப்புத் திட்டமாகும். இது உங்களுக்கு சிறப்பு வரிச் சலுகைகளை அளிக்கிறது. உங்கள் பணி ஓய்வு என்பது நிம்மதி தருகின்ற, சிறந்ததொரு நிகழ்வாக இருப்பதற்காக சேமிக்க இது மிகச் சிறந்த வழியாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் இடும் பணம் வரிவிலக்கு சலுகைக்குரியது, உங்கள் பணம் வட்டியுடன் அதிகரிக்கும் போதும் அது பணி ஓய்வு சேமிப்புத் திட்டத்தில் வரிவிலக்கு பெற்ற தொகையாகவே இருக்கும்.

பணி ஓய்வு சேமிப்புத் திட்டத்தின் மூலம்
உங்கள் பணி ஓய்வுக்காக சேமியுங்கள்

பணி ஓய்விற்குச் சேமித்தல்

TD நேரடி முதலீடு சேவை வழங்கும் வர்த்தக அணுகல் தளங்கள், ஆன்லைன் கருவிகள் மற்றும் ஆதரவைக் கொண்டு நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம்.

TD நேரடி முதலீட்டுச் சேவை பற்றி
மேலும் அறிக

உங்கள் சேமிப்புகளை முதலீடு செய்து வர்த்தகம் செய்தல்

கடனுதவி பெறுவது என்பதை புத்திசாலித்தனமாக செய்தால், அது ஒரு சிறந்த நிதியியல் முடிவெடுத்தலாக இருக்கும். உங்களுக்கு வேண்டியவற்றைப் பெறுங்கள், உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சரியான கடன் வசதியைப் பயன்படுத்துங்கள்.

தனிநபர் கடன்கள்
பற்றி மேலும் அறிக

ஒதுக்குத் தொகைக்
கடன் வசதிகள் பற்றி மேலும் அறிக

கடன் பெறுதல்

விலைமதிப்பு மிக்க உலோகங்களை வாங்குவது மிகச் சிறந்த முதலீடாகும், அவை மதிப்புமிக்க அன்பளிப்பாகவும் இருக்கும். TD கிளைகளில் நீங்கள் பாளங்கள் ("உலோகக் கட்டிகள்"), நாணயங்கள் மற்றும் சான்றிதழ்களை எளிதாக வாங்கலாம்.

உலோகக் கட்டிகள், நாணயங்கள் மற்றும் சான்றிதழ்களை எப்படி வாங்குவது

விலை மதிப்புள்ள உலோகங்களை வாங்குதல்

100 ஆண்டுகளாக, கனடாவிற்கு
புதிதாக வருபவர்களுக்கு சேவை புரிந்துவருகிறோம்

நீங்கள் TD வங்கிச் சேவையைப் பயன்படுத்தும்போது, உங்கள் பணமும் உங்கள் தனிப்பட்ட தகவலும் எப்போதும் பாதுகாக்கப்பட்டதாகவே இருக்கும்.

1,150-க்கும் அதிகமான கிளைகள் - கனடாவின் மற்ற வங்கிகளை விட அலுவல் நேரத்தையும் தாண்டி நீண்ட நேரம் திறந்திருக்கும், அவற்றில் 400 கிளைகளில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சேவை உண்டு.2

200-க்கும் அதிகமான மொழிகளில் சேவை.

கனடாவிற்குப் புதியவர்களுக்கான பிற சேவைகள்

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்கள்" தொகுப்பு

எங்கள் "கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்பில்"
தொடக்கத்தில் உங்களுக்குத் தேவைப்படும் அனைத்தும் உள்ளது.


நீங்கள் ஒரு TD கிளைக்கு வரும்போது, 2 அடையாள ஆவணங்களைக் கொண்டு வரவேண்டும்:

(1) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • நிரந்தரக் குடியிருப்பு அட்டை
 • நிரந்தரக் குடியிருப்புக்கான உறுதிப்படுத்தல் (IMM படிவம் 5292)
 • தற்காலிக அனுமதி (IMM படிவம் 1442, 1208, 1102)

(2) பின்வரும் ஆவணங்களில் ஒன்று:

 • செல்லுபடியாகும் பாஸ்போர்ட்
 • கனடிய ஓட்டுனர் உரிமம்
 • கனடிய அரசாங்க அடையாள அட்டை
கனடாவிற்குப் புதியவர்களுக்கான தொகுப்புக்குத் தகுதி பெற:
 • நீங்கள் 2 அல்லது குறைவான ஆண்டுகள் கனடாவில் நிரந்தரமாக அல்லது தற்காலிகமாக வசிப்பவராக இருக்க வேண்டும்
 • உங்கள் நிரந்தரக் குடியிருப்பாளர் அட்டை அல்லது தற்காலிக அனுமதி மூலமாக உங்கள் குடியிருப்பு நிலைக்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
 • நீங்கள் இதுவரை TD காசோலைக் கணக்கைத் திறந்திருக்கக் கூடாது அல்லது வைத்திருக்கக் கூடாது
 • நீங்கள் உங்கள் மாகாணம் அல்லது பகுதிக்குரிய நிறை வயது பூர்த்தியானவராக இருக்க வேண்டும்.

TD உதவும்!

கேளுங்கள், பதிலளிக்கிறோம்!